மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 144வது ஜெயந்தி விழா




மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 144வது ஜெயந்தி விழா எங்கள் அலுவலகத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் திரு. சுவாமிஜி, திரு. மோகனராமன், திரு. தன்ராஜ் (IAS அகாடமி), திரு. கமலகண்ணன், திரு. கோபிநாதன், திருமதி. பாத்திமா மற்றும் திருமதி. ராணி பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். மேலும், சுமார் 130 பேர் மற்றும் மாணவ, மாணவிகள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மாணவ, மாணவிகள் உரைகளை மிகுந்த ஆர்வத்துடனும் கவனத்துடனும் கேட்டனர்.
இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நல்லதிட்ட உதவிகள் இருளர் சமூகத்தையும் மீனவர் சமூகத்தையும் சேர்ந்த 100 பேருக்கு வழங்கப்பட்டன. அதேபோல், அனைவருக்கும் சிற்றுண்டியும் வழங்கப்பட்டது.
